இந்தியா

கர்நாடகாவில் விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் சித்தராமையா

DIN

பெங்களூரு: கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற சிறுவிவசாய கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய (ஜூன் 21) தொடரில் முதல்வர் சித்தராமையா உரையாற்றினார்.

அப்போது, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போதெல்லாம், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
 
இதனை ஏற்று, நேற்று (ஜூன் 20) வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற குறுகிய கால கடன், பயிர் கடன் ஆகியவற்றில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 22 லட்சத்து, 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு ரூ.8,165 கோடி சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும், விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT