மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: 10 மணி வரை 29% வாக்குப் பதிவு!
இன்று நடைபெறும் மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 10 மணி வரை 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்பால்: இன்று நடைபெறும் மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 10 மணி வரை 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முதல் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய தேர்தலில் 529 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும், 837 சாவடிகள் உயர் பதட்ட நிலையில் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாக்காளர்களின் வரிசையில் பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
இதில் காலை 10 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.