முகப்பு
இந்தியா

கோவாவில் அயர்லாந்து பெண் கொலை: குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியது கத்தோலிக்கத் துறவியாம் ! 

கோவாவின் கனகான் கடற்கரையில் திங்களன்று அயர்லாந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிக்க கத்தோலிக்க துறவியான புனித அந்தோனியார் உதவியதாக ..

Updated On : 16 மார்ச், 2017 at 3:30 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:44 PM

பனாஜி: கோவாவின் கனகான் கடற்கரையில் திங்களன்று அயர்லாந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிக்க கத்தோலிக்க துறவியான புனித அந்தோனியார் உதவியதாக வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் கனகான் கடற்கரையில் கடந்த திங்கள் அன்று அயர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான இளம்பெண் ஒருவரின் இறந்த உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.இந்தவழக்கை விசாரித்த கோவா மாநில காவல்துறை செவ்வாயன்று பழைய குற்றவாகியான் விகாஸ் பகத் என்பவனை கைது செய்தது.இது குறித்து வழக்கின் விசாரணை அதிகாரியும், கனகான் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளருமான  சாமி தவாரேஸ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தியில்தான், இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கத்தோலிக்க துறவியான பதுவாவின் புனித அந்தோனியார் உதவியதாக தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவு பின்வருமாறு:

கடந்த 13-ஆம் தேதி காலையில் 9 மணி அளவில் கனகான் கடற்கரையில் வெளிநாட்டு இளம்பெண் ஒருவரின் இறந்த உடல்  நிர்வாண நிலையிகள் கிடப்பதாக தகவல் வந்தது. உடனே நான் எனது வழிகாட்டியான பதுவாவின் புனித அந்தோனியாரிடம் வேண்டிக் கொண்டேன்.அன்று அவருக்கான தினம் .எனவே அவர் இந்த வழக்கில் தலையிட்டு, வழக்கின் சிக்கலைத் தீர்க்க எனக்குஉதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

Advertisement

அதன்படியே விசாரணை துவங்கிய சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் கண்டுபிடிக்க தேவையான மிக முக்கிய தடயம் கிடைத்தது.  அதன்மூலம்தான் நாங்கள் குற்றவாளியான விகாஸ் பகத்தை நெருங்கினோம். தொடர் விவசாரணையில் அவன் இந்த கொடூர கொலை வழக்கில் தன்னுடைய  பங்கை ஒப்புக் கொண்டான்.    

இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.