இந்தியா

பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களுக்கு ஏப்ரல்-1 முதல் தடை!

தினமணி

புதுதில்லி: பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக அவை வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு பி.எஸ் என்னும் தர நிர்ணய முறை வாகனங்களுக்காக தயாரிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்பொழுது விற்பனையாகும் வாகனங்களில் பி.எஸ் 3 தர நிர்ணய முறைதான்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை இன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT