இந்தியா

கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகனை சிறைபிடித்த மணமகளின் குடும்பம்!

கூடுதலாக வரதட்சணை கேட்ட மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை மணமகளின் குடும்பம் சிறைபிடித்த ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

IANS

பல்வால்(ஹரியானா): கூடுதலாக வரதட்சணை கேட்ட மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை மணமகளின் குடும்பம் சிறைபிடித்த ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் பல்வால்  மாவட்டத்தில் உள்ளது ஹாதின் என்னும் கிராமம். இங்கு பரித் குரேஷி என்பரின் திருமணம் நேற்று நடைபெற்றது.அப்பொழுது மணமகள் குடும்பத்தாரிடம் இருந்து பரித் 'திடீர்' என்று கூடுதலாக வரதட்சணை கேட்டதாகவும், அத்துடன் மணமகள் குடும்பத்தரைப் பற்றி தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகன் பரித் குரேஷி , அவரது சகோதரர் உள்ளிட்ட நால்வரை அங்கிருந்த ஒருஅறையில் அடைத்து கதவை பூட்டி விட்டனர்.  

அத்துடன் ஊர் பஞ்சயத்தாருக்கும் உடனடியாக தகவல் சொல்லப்பட்டது. மணமகள் தரப்பைக் கேட்ட அவர்கள் மணமகன் பரித் உடனடியாக 4 ஏக்கர் நிலம் அல்லது 10 லட்சம் ரூபாய் பணத்தை மணமகள் குடும்பத்திற்கு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. நேற்று அரசாங்க அலுவலகங்கள் விடுமுறையென்பதால் நிலத்தை மணமகள் பெயருக்கு மாற்றும் வரை, பரீத் பஞ்சயத்தில் ரூ 10 லட்சத்தினை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்படி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு திரும்ப அனுமதிக்க பட மாட்டாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தாரும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தனர்.பின்னர் பரீத் உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நேற்று பின்னிரவு வரையில் அவர் பணம் எதுவும் செலுத்தியதாக தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT