மோடியை விட அதிகமுறை வெளிநாட்டுக்குச் சென்ற பிரதமர்: அமித்ஷாவின் 'ஷாக்' ரிப்போர்ட்
இந்தியாவில் பிரதமர் மோடியை விடவும் அதிக முறை வெளிநாட்டுக்குச் சென்ற பிரதமர் பட்டியலில் மன்மோகன் சிங் தான் முதலிடத்தில் இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
புது தில்லி: இந்தியாவில் பிரதமர் மோடியை விடவும் அதிக முறை வெளிநாட்டுக்குச் சென்ற பிரதமர் பட்டியலில் மன்மோகன் சிங் தான் முதலிடத்தில் இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து கடுமையான விமரிசித்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு, அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, புள்ளி விவரங்களின் அடிப்படையில், பிரதமர் மோடியை விட, மன்மோகன் சிங் தான் அதிக முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அமித் ஷா, "இதில் வேற்றுமை என்னவென்றால், மன்மோகன் சிங் வெளிநாடு செல்லும் போது அதை யாருமே கவனிக்க மாட்டார்கள். அவர் எப்போது புறப்படுகிறார், எப்போது திரும்புகிறார் என்பதே யாருக்கும் தெரியாது" என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.
வெளியுறவுக் கொள்கையில் மிகுந்த கவனம் செலுத்தும் பிரதமர் மோடி, அந்த துறையை தன்னந்தனியாகக் கவனித்து வருவதாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.
மோடி, பிரதமராக பதவியேற்று முதல் 25 மாதங்களில், 24 சர்வதேச சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு 40 உலக நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.