வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற இலக்கு: மோடி
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற இலக்கு: மோடி
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, தன்னார்வத் தொண்டு நிறுவனமான பாரத சேவாசிரம சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மோடி கூறியதாவது:
வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.40,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
நாட்டின் வடகிழக்குப் பகுதியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மாற்ற வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் இந்தியாவின் தூய்மையான நகரங்களில் வடகிழக்கில் இருந்து காங்டாக் நகரம் மட்டுமே முதல் 100 இடத்துக்குள் வந்துள்ளது. 4 வடகிழக்கு நகரங்கள் 100 முதல் 200 இடங்களில் உள்ளன. இதிலும் ஷில்லாங் நகரம் 276-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வடகிழக்குப் பிராந்தியத்தில் துய்மையைப் பாதுகாப்பது என்பது அங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்குமான சவாலாகும். நுழைவு வாயில் தூய்மையாக இல்லாவிட்டால், நமது நோக்கம் நிறைவேறாது. பாரத சேவாசிரம சங்கம் உள்பட அனைத்து அமைப்புகளும் நகரங்களில் தூய்மையைப் பேணுவதில் கைகோத்து செயல்பட வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படவில்லை.
வடகிழக்கில் சிறப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. இது தவிர சிறிய விமானங்கள் பலவும் அமைக்கப்படவுள்ளன என்று மோடி பேசினார்.