முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: சரத் பவார்

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு வலுவாக இருக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு வலுவாக இருக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர பிரிவின் கூட்டம் மும்பையில் சரத் பவார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சி (பாஜக) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது. ஒருவேளை, அக்கூட்டணியில் இல்லாத டிஆர்எஸ், அதிமுக, திமுக ஆகியவை ஆதரவு அளித்தால் பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும் என்று சரத் பவார் பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →