இந்தியா

உ.பி.: துப்பாக்கி முனையில் மணமகனை கடத்திய பெண் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் மணமகனை கடத்திச் சென்ற பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது:

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் மணமகனை கடத்திச் சென்ற பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது:
பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக் யாதவ். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் மீது காதல் கொண்டார். எனினும், இதற்கு அசோக்கின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர், அவருக்கும் ஹாமிர்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை (மே 15) திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அசோக் யாதவின் காதலி 2 பேருடன் சேர்ந்து அங்கு வந்தார். அவர்கள் துப்பாக்கி முனையில் மணமேடையில் இருந்த அசோக்கை கடத்திச் சென்றனர். தன்னை ஏமாற்றிவிட்டு, அசோக் வேறொரு பெண்ணை மணப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அந்தப் பெண் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணும், அவரது 2 நண்பர்களும் பாந்தா அருகே வியாழக்கிழமை போலீஸார் கைது செய்யப்பட்டனர். அசோக் யாதவை அவர்கள் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், அசோக் வேறு யாரையும் மணப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று அந்தப் பெண் மீண்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT