இந்தியா

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

DIN


புது தில்லி: கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்ட விரோதமாக ஒருதரப்பிடம் இருந்து மற்றொரு தரப்புக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரினை அடுத்து, சிபிஐ வழக்குப் பதிந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.

இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, ஐஎன்ஸ் நிறுவன அன்னிய முதலீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகக் கூறி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று காலை லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT