முகப்பு
இந்தியா

இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

புதுதில்லி: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு அந்நாட்டின் பிரதமர் தெரசாமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி கண்டம்: இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக தனது டுவிட்டர் பக்க பதிவில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் மிகவும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →