இந்தியா

மிசோரம் சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

மிசோரம் சட்டப் பேரவையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

DIN

மிசோரம் சட்டப் பேரவையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்காக மிசோரம் சட்டப் பேரவையின் ஒருநாள் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வரித் துறை அமைச்சர் லால்சவ்தா, ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து கட்சி எம்எல்ஏ-க்களும் மசோதாவுக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து, பேரவையில் ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மிசோரம் மதிப்புக் கூட்ட வரி திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மதுபானம், அதிதிறன் கொண்ட டீசல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் உள்ளிட்டவை மதிப்புக் கூட்டு வரி வரம்புக்குள் வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT