இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவால்: ஆம் ஆத்மியின் கோரிக்கை நிராகரிப்பு

DIN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்காக விடுக்கப்பட்டிருக்கும் சவாலில், அந்த இயந்திரத்தின் மதர்போர்டை பயன்படுத்த அனுமதிக்கக் கோரும் ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்பட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை, அரசியல் கட்சிகள் நிரூபித்துக் காட்டுவதற்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதித்துப் பார்க்க, ஜூன் 3-ஆம் தேதி முதல் அரசியல் கட்சியினர் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கு சில நிபந்தனைகளையும், தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அவற்றில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மதர்போர்டில் எந்தவித சோதனையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்பது முக்கியமானதாகும்.
ஆனால், இந்த நிபந்தனை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டது.
அதில், "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மதர்போர்டில் மட்டும்தான் இத்தகைய முறைகேடுகளை செய்ய இயலும்; அவ்வாறு இருக்கும்போது, மதர்போர்டை பயன்படுத்தக் கூடாது எனக் கூறுவது ஏற்கதக்கதல்ல. எனவே, இந்த நிபந்தனையை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மதர்போர்டில் சோதனை செய்ய அனுமதித்தால் அது, அந்த இயந்திரத்தின் இயல்பு தன்மையை பாதிக்கும். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மதர்போர்டை ஒருவர் பயன்படுத்த அனுமதிப்பது என்பது, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க அனுமதிப்பதற்கு சமமாகும். அது சாத்தியமற்ற ஒன்று என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT