இந்தியா

'ஹிந்துத் தீவிரவாதம்' சர்ச்சையில் கமல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Raghavendran

வலதுசாரி இயக்கங்கள் முன்பெல்லாம் வாதத்தில் தான் எதிர்தரப்பை வெல்லும். ஆனால் தற்போது வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் ஹிந்துத் தீவிரவாதம் இனியும் இல்லை என கூறமுடியாது என்று புதிய சர்ச்சையை நடிகர் கமல்ஹாசன் வியாழக்கிழமை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே கேரளா மட்டும் தான் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்விகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு, பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஹிந்துத் தீவிரவாதம் கருத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மீது 500, 511, 298, 295(a) & 505(c) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT