இந்தியா

மத்தியப்பிரதேச இடைத்தேர்தல்: வெற்றியுடன் தொகுதியைத் தக்க வைத்த காங்கிரஸ்

Raghavendran

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ராகூட் என்ற தொகுதிக்கு நவம்பர் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றிபெற்றார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப்ரேம் சிங் (வயது 65) சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக இங்கு போட்டியிட்ட நிலன்ஷு சதுர்வேதி அமோக வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் தனது தொகுதியைத் தக்க வைத்தது. 

நிலன்ஷு சதுர்வேதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷங்கர் தயாள் திரிபாதியை விட 14,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 

12 வேட்பாளர்கள் வரை களமிறங்கிய இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மட்டும் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் வேட்பாளர் மொத்தம் 66,810 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 52,677 பெற்று தோல்வியுற்றார்.

முன்னதாக மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் ப்ரேம் சிங், இந்தத் தொகுதியில் இருந்து 1998, 2003, 2013 வருடங்களில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடையில் 2008-ம் ஆண்டில் மட்டும் பாஜக-வின் சுரேந்திர சிங் கஹர்வார் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT