இந்தியா

2008 மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் மொழிபெயர்ப்பாளரிடம் வாக்குமூலம் பதிவு

DIN

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக அதிகாரப்பூர்வ மொழி
பெயர்ப்பாளரிடம் நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்தது.
லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியும், குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவருமான அபு ஜுண்டாலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் சில ரகசிய ஆவணங்களில் இருந்த முக்கியத் தகவல்களை மொழிபெயர்த்து அளிப்பதற்காக முகமது நக்வி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. 
இந்த வழக்கில் நக்வி இரண்டாவது முக்கிய சாட்சி ஆவர். முதல் சாட்சி, அமெரிக்காவில் சிறைவாசம் அனுபவித்துவரும் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற பயங்கரவாதி ஆவர்.
ஹெட்லியிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு விடியோ முறையில் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, முகமது நக்வியிடம் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் உஜ்வால் நிகம் விசாரணை நடத்தினார். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அவரிடம் நிகம் குறுக்கு விசாரணை நடத்த
வுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அபு ஜுண்டால் சவூதி அரேபியாவிலிருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT