இந்தியா

கம்யூனிஸ்ட், பாஜக இடையே மாநகராட்சி அலுவலகத்தில் கைகலப்பு: மேயர் காயம்

Raghavendran

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக மாநகராட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் பிரசாந்த் காயமடைந்தார்.

திருவனந்தபுரம் தெருக்களில் மின் விளக்குகள் பொருத்துவது தொடர்பான கோரிக்கை பாஜக மாநகராட்சி உறுப்பினர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், தேவையில்லாமல் தெருக்களில் மின் விளக்குகள் பொருத்த இயலாது என்று மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையில்லாத இடங்களில் மின் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியமில்லை என்று அந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இவ்விகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மாநகராட்சி மன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த மேயரை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கும்படி பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஐ.பி.பினு, பாஜக உறுப்பினர் கிரி குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவத்தில் திருவனந்தபுரம் மேயர் பிரசாந்த் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT