இந்தியா

இந்தியப் பெண் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய பாக்., பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கு முடக்கம்

Raghavendran

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் தவறான வாசகங்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் அந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது.

இதன்காரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் தனது நிஜப் புகைப்படத்துடன் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கில் பயன்படுத்தப்பட்ட போலி வாசகம் அடங்கிய புகைப்படத்தை அந்தப் பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT