முகப்பு
இந்தியா

குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவர்கள்: விமான பணிப்பெண் அளித்த தண்டனை என்ன தெரியுமா? (விடியோ இணைப்பு)  

குடிபோதையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவரை விமான பணிப் பெண் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

ஐதராபாத்: குடிபோதையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவரை விமான பணிப் பெண் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணிப் பெண் ஒருவர் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு குடிபோதையில் இருந்த இரு இளைஞர்கள் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பெண்ணின் உதவிக்குரல் கேட்டு அங்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் அவ்விரு  இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அப்பெனிடம் தொடர்ந்து மன்னிப்பு   கோரினர். அவர்களின் நடத்தையால் கோபத்துடன் காணப்பட்ட அந்தப்பெண், அவ்விரு இளைஞர்களையும் தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தினார்.

பின்னர் காவல் நிலையத்தில் மாணவர் அந்த விமான பணிப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.ஆனால் இளைஞர்கள் இருவரும் மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது அந்தப் பெண் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. 

இருந்த போதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த புகாரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விடியோ: 

முழு கட்டுரையைப் படிக்க →