முகப்பு
இந்தியா

7 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழக்க காரணமான 2 நக்ஸல்கள் கைது

கடந்த வருடம் 7 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழக்க காரணமாக 2 நக்ஸல்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

கடந்த வருடம் சத்தீஸ்கரின் மைலவாடா என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தாக்குதல் சம்பவத்தை நடத்திய நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த இருவரது புகைப்படமும் வெளியிடப்பட்டது. அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கரின் குவகொண்டா பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் அதே பகுதியில் பதுங்கியிருந்த அந்த 2 நக்ஸல்களையும் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →