இந்தியா

தில்லி முதல்வர் கேஜரிவாலின் கார் திருட்டு

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 2015-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்த நீல நிற "வேகன்-ஆர்' கார், தலைமைச் செயலகத்தில் இருந்து வியாழக்கிழமை திருடு போனது.
தலைமைச் செயலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கார், நண்பகல் சுமார் 1 மணி அளவில் காணாமல் போனதாக போலீஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரையில், "போலீஸாரின் கவனம் எங்கு உள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தக் காரை வெளிநாடு வாழ் இந்தியரான குந்தன் சர்மா என்ற பொறியாளர் கடந்த 2013 ஜனவரியில் கேஜரிவாலுக்கு பரிசாக அளித்தார். அப்போது முதல் அந்தக் காரை இடைவிடாது பயன்படுத்தி வந்த கேஜரிவால், 2014-ஆம் ஆண்டு தில்லி காவல்துறைக்கு எதிரான போராட்டத்தின்போது அந்தக் காரிலேயே உறங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். தில்லி சட்டப்பேரவை தேர்தலின்போது அந்தக் காரில் சென்று பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால், விஐபி கலாசாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில், தாம் முதல்வரான பிறகும் அந்தக் காரையே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT