இந்தியா

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

DIN

மகாராஷ்டிரத்தில் 4 மாநகராட்சிகளின் சில வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது.
மும்பை, புணே, கோலாபூர், நாகபுரி ஆகிய 4 மாநகராட்சிகளின் சில வார்டுகளுக்கு புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கோலாபூர் மாநகராட்சியில் மட்டும் பாஜகவின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. 
வாக்கு முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை மாநகராட்சியின் 116-ஆவது வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனை கட்சியின் வேட்பாளர் மீனாட்சி பாட்டீலை காட்டிலும், 11,129 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ஜக்ருதி பாட்டீல் வெற்றி பெற்றார். நாகபுரி மாநகராட்சியின் 35-ஏ வார்டில் பாஜகவின் சந்தீப் கவாய், புணே மாநகராட்சியின் 21-ஏ வார்டில் ஹிமலி நவ்நாத் காம்ப்லே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கேலாபூரில் 11-ஆவது வார்டில் ரத்னேஷ் ஷிதோல்கர் வெற்றி பெற்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT