இந்தியா

ஹிமாசல் முதல்வரின் உறவினர்கள் பாஜகவில் ஐக்கியம்

DIN

ஹிமாசலப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங் மனைவியின் சகோதரர்கள் வீர் விக்ரம் சென், பிரித்வி விக்ரம் சென், வீர் விக்ரமின் மனைவி ஜோதி சென் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9}ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் உறவினர்கள் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளது காங்கிரஸýக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாசலப் பிரதேச பாஜக பொறுப்பாளர் மங்கள் பாண்டே முன்னிலையில் இந்த மூவரும் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமாயினர்.
ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் 50 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று அப்போது மங்கள் பாண்டே தெரிவித்தார்.
ஜோதி சென் கடந்த 2012}ஆம் ஆண்டு ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். வீர் விக்ரம் சென், காங்கிரஸ் வட்டாரத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT