இந்தியா

விமானப் பயணிகளின் உடைமைகள் எப்படி திருடப்படுகின்றன? மணிப்பூர் முதல்வர் பகிர்ந்த விடியோ

DIN


விமானப் பயணிகளின் பைகளில் இருக்கும் பொருட்களை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள்  திருடும் விடியோ காட்சியை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்ட இந்த விடியோக்களில், விமானப் பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய ஊழியர்கள் எவ்வாறு திருடுகிறார்கள் என்ற காட்சி பதிவாகியுள்ளது.

பொதுவாகவே விமானப் பயணிகள், தங்கள் பயணத்தின்போது உடமைகள் பத்திரமாக இருப்பதாகவே உணர்வோம். ஏன் என்றால், அவை சீல் வைக்கப்பட்டிருக்கும். அதனை யாரும் அகற்ற முடியாது என்பதே. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.


மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், சமூகதளத்தில் பகிர்ந்துள்ள விடியோவில், "விமானத்தில் கொண்டு செல்லும் நமது உடைமைகள் பத்திரமாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

விமான ஊழியர்கள் சிலர் விமானத்தில் ஏற்றப்பட்ட உடைமைகளைத் திறந்து பொருட்களை திருடும் காட்சி அந்த விடியோக்களில் இடம்பெற்றுள்ளது. இந்த விடியோக்களைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT