இந்தியா

சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமனம்: முக்கிய துறை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சிபிஐ, உளவுத்துறை மற்றும் சிஆர்பிஎப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

ANI

புதுதில்லி: சிபிஐ, உளவுத்துறை மற்றும் சிஆர்பிஎப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, குஜராத் மாநில காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிஎஸ்ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு பிறகு அஸ்தானா இரண்டாவது மூத்த அதிகாரியாக கருதப்படுகிறார். அஸ்தானா தற்போது நிறுவனங்களின் கூடுதல் இயக்குநராகவும் மற்றும் அக்ஸ்டாவெஸ்ட்லாண்ட் ஆய்வு உட்பட பல முக்கியமான விசாரணைகளை கையாண்டு வருகிறார்.

அஸ்தானாவுடன் சேர்ந்து பதவி உயர்வு மற்றும் மாற்றுப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் பலர் 1984 பிரிவைச் சேர்ந்தவர்கள்.

உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பாச்சன் சிங், சிஆர்பிஎப் சிறப்பு டி.ஜி.யாக சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஐபிஎஸ் அதிகாரிகள் தீபக் குமார் மிஸ்ரா மற்றும் சுதிப் லக்தாகியா ஆகியோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) சிறப்பு டி.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். குர்பாச்சான் சிங் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி எல்லை பாதுகாப்பு படை சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ராஜேஷ் ரஞ்சன் மற்றும் ஏபி மகேஸ்வரி ஆகியோர் பிஎஸ்எஃப்யில் சிறப்பு டி.ஜி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இரவின் ஒளி நீ... ஜான்வி கபூர்!

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் கண்டனம்

அகிலம் அதிருதா... தலைவர் 173 அறிவிப்பு - விடியோ!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT