இந்தியா

காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள்: பாரதிய ஜனதா கட்சி எம்.பியின் சர்ச்சை பேச்சு!

காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி காமக்யா பிரசாத் டஸ்ஸா பேசியிருப்பது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.  

ENS

கெளஹாத்தி: காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி காமக்யா பிரசாத் டஸ்ஸா பேசியிருப்பது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.  

அஸ்ஸாம் மாநில ஜோர்ஹட் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பியாக இருப்பவர் காமக்யா பிரசாத் டஸ்ஸா. ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரான இவர் தற்பொழுதுதான் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சனிக்கிழமை அன்று கிழக்கு அஸ்ஸாமின் சாரைடியோ மாவட்டத்தில் உள்ள சோனரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, 'காங்கிரஸ் கட்சியானது தீனதயாள் உபாத்யாயா உள்ளிட்ட வர்களை பற்றி அறியாமலேயே, பொதுமக்களின் மூளைகளை காந்தி மற்றும் நேரு உள்ளிட்ட குப்பைகளை கொண்டு கழுவியுள்ளது என்று பேசினார்.

இவர் அவ்வாறு பேசும் பொழுது மேடையில் அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த பேச்சினை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. அத்துடன் நேற்று காமக்யா பிரசாத் மீது காவல் துறையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காமக்யா பிரசாத்தினை ஞாயிறன்று கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.அத்துடன் அவரை கைது செய்யவும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT