இந்தியா

தேசத்தின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி

Raghavendran

பாஜக தலைமையகத்தில் திபாவளி மிலான் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இது நமக்கு சவாலான நேரம். இந்த நேரத்தில் நாம் நிறைய காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறைகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த திட்டத்தின் நற்பண்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அதுபோல அனைத்து விவகாரங்களிலும் உள்ள நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஏனெனில் தேசத்தின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. அரசு சார்ந்த மக்கள் நலத்திட்டங்களை நாட்டு மக்களிடம் அவர்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT