இந்தியா

யாசின் மாலிக் கைது: வீட்டுக் காவலில் மீர்வாய்ஸ் உமர்

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோன்று மற்றொரு தலைவரான மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

DIN

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோன்று மற்றொரு தலைவரான மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து போலீஸார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தில்லி செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கு எதிராகவும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாசின் மாலிக்கை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 11-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டார். மீர்வாய்ஸ் உமரையும் போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT