அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று அதிகாலை 4.08 மணியளவில்
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:24 PM
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று அதிகாலை 4.08 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு 10 கிலோ மீட்டருக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவாகி உள்ளதாக தேசிய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள், பாதிப்புகள் குறித்த விபரங்கள் ஏதும் வெளியாகாவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement