இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்!

ANI

அர்னியா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

"பாகிஸ்தான் படையின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை கடுமையான முறையில் பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை 6.45 வரை நீடித்தது' இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்னியா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள சோதனைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரர் விஜேந்தர் பகதூர் வியாழக்கிழமை நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 12.20 மணியளவில் பாகிஸ்தான் எல்லை காப்புப் படையினர் அத்துமீறி நடத்திய சிறிய ரக துப்பாக்கிகளால் சுட்டதோடு, ராக்கெட் குண்டுகளையும் வீசினர்.

இதில், விஜேந்தர் பகதூரின் வயிற்றுப்பகுதியில் தோட்டா பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுவம் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்படும் போர்நிறுத்த மீறல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் 285 முறை அத்துமீறித் தாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் 228 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT