இந்தியா

விபத்தில் காயமடைந்தவரை முதுகில் சுமந்துகொண்டு மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ., திவேதி!

DIN

பரூக்காபாத்: உத்தரபிதேசத்தில் உள்ள பரூக்காபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பாஜக எம்.எல்.ஏ., திவேதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத் மாவட்டம், சதார் சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்.எல்.ஏ., சுனில் தத் திவேதி. இவர், பரூக்காபாத் - பதேகார் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை (செப்.23) பீம்சென் மார்க்கெட் பகுதியில், இரண்டு பைக்குகள் மற்றும் சைக்கிளில் சென்ற மூன்று பேர் ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்துக்குள்ளாயினர். மூன்று பேரும் மயக்க நிலையில் சாலையில் கிடந்ததை, அந்த வழியாக பயணித்த எம்.எல்.ஏ., திவேதியின் பார்வைக்கு தெரியவந்துள்ளது.  

இதையடுத்து தன்னுடன் வந்த உதவியாளர்கள் உதவியுடன் மூன்று பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க விரைந்து செயல்பட்டார். அருகில் இருந்த லோதியா மருத்துவமனைக்கு, மூன்று பேரையும் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது மருத்துவமனையில் இரண்டு, ஸ்டெச்சர்கள் மட்டுமே இருந்தன. எனவே, காயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஒருவரை எம்.எல்.ஏ., திவேதி தனது முதுகில் சுமந்தபடி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சேர்த்தார். 

எம்.எல்.ஏ., திவிவேதியின் செயல் அனைவருக்கும் மனிதகுலத்தின் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்கள் நாகலா பிரிதம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் சிங் செளஹான், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ரமேஷ்வர் சிங் மற்றும் நாகாலா தீன் பகுதியைச் சேர்ந்த ரிஷப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT