முகப்பு
இந்தியா

ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்! 

ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் துவங்கப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

புதுதில்லி: ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் துவங்கப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ள தகவலாவது:

ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை ஒன்றினை விரைவில் துவங்க மத்திய அரசு உத்தேசித்து வருகிறது.

அவ்வாறு ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் திட்டமானது நடைமுறைக்கு வந்தால் பெட்ரோல் டீசல் இரண்டையும் வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு பிரதான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →