இந்தியா

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விலைப்பட்டியலுக்கான காலக்கெடு நீட்டிப்பு: அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விலைப்பட்டியலுக்கான காலக்கெடு நீட்டித்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சனிக்கிழமை அறிவித்தார்.

DIN

நாடு முழுவதும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நுகர்பொருள் மீதான விலைப்பட்டியலை அதற்கு தக்க வகையில் மாற்றம் செய்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதன் அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரையில் விலைப்பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட காலக்கெடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ந் தேதி (இன்றுடன்) இந்தக் காலக்கெடு முடிவடைகிறது. ஆனால், பெரும்பாலான நுகர்பொருள்களில் இந்த திருத்த விலைப்பட்டியல் இடம்பெறவில்லை. மேலும், வருகிற ஜூலை 1, 2018-ல் இதன் அடிப்படையிலான பட்ஜெட் அறிவிக்கப்படவுள்ளது. 

எனவே, ஜிஎஸ்டி திருத்த விலைப்பட்டியலுடன் நுகர்பொருட்களை வெளியிட அந்தந்த நிறுவனங்கள் கால அவகாசம் கோரியது. 

எனவே, இந்த திருத்த விலைப்பட்டியலுக்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31,2017 வரை அதாவது இந்த வருட இறுதிவரை நீட்டித்து மத்திய உணவு, நுகர்பொருள் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

SCROLL FOR NEXT