இந்தியா

தலித் மக்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி 

தலித் மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித் சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: தலித் மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித் சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவினை செவ்வாய் மதியம் விசாரித்த உச்ச நீதிமன்றமானது,  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில் தலித் மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித் சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு தலித் சமூகத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

அப்பொழுது அவர்களிடம் தலித் மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது நலமான வாழ்வே இந்த அரசின் முதண்மையான் குறிக்கோள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக, சந்திப்பின் பொழுது உடன் இருந்த பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT