இந்தியா

விமானத்தில் கொசுத்தொல்லை: புகார் கூறிய மருத்துவரை கீழே இறக்கி விட்ட விமான நிறுவனம்! (விடியோ) 

விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதாக புகார் கூறிய மருத்துவரை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்ட சம்பவத்தில், விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

IANS

புதுதில்லி: விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதாக புகார் கூறிய மருத்துவரை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்ட சம்பவத்தில், விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திங்களன்று  லக்னௌவிலிருந்து தில்லி நோக்கி புறப்பட இண்டிகோ விமான நிறுவன விமானம் ஒன்று விமான நிலையத்தில் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்த பிறகு, அங்கு கொசுதொல்லைஅதிகமாக இருந்தது. பயணிகள் தங்கள் கையில் உள்ள அட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு  கொசுக்களை விரட்டியபடி இருந்தனர்.

இந்நிலையில் பயணிகளில் ஒருவரான மருத்துவர் சவுரப் ராய் என்பவர் இது தொடர்பாக விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.  

இந்நிலையில் புகார் கூறிய மருத்துவரை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்ட சம்பவத்தில், விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "லக்னௌ விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திலிருந்து பயணியான மருத்துவர் சவுரப் ராய் இறக்கி விடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்குஉத்தரவிட்டுளேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இண்டிகோ விமான நிறுவனம், "குறிப்பிட்ட அந்த பயணி  விமான ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டார். இத்தகைய ஒழுங்கீனங்களை சகித்துக் கொள்ள இயலாது" என்று தெரிவித்துள்ளது.  

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT