இந்தியா

கர்நாடக பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) தொடங்குகிறது. 
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 12-இல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. 
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 25-இல் நடக்கிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 27-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.
வேட்பாளர் பட்டியல்: முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 154, காங்கிரஸ் 218, மஜத 126 வேட்பாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. மூன்று கட்சிகளும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கே தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT