இந்தியா

கதுவா சம்பவம் அவமானகரமானது: ஜம்முவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பேச்சு! 

கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட  சம்பவம் அவமானகரமானது என்று  ஜம்முவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

IANS

ஜம்மு: கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட  சம்பவம் அவமானகரமானது என்று  ஜம்முவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஜம்முவின் கட்ரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

அங்கு அவரை மாநில ஆளுநர் வோராவும், முதல்வர் மெஹபூபா முப்தியும் பவரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நாடு விடுதலையடைந்து 70 வருடங்களுக்குப் பிறகு இத்தகைய ஒரு சம்பவம் அவமானகரமானது. எந்த மாதிரியான ஒரு சமூகமாக நாம் உருவாகி வருகிறோம் என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நமது மகள்களுக்கோ அல்லது சகோதரிகளுக்கோ இது போன்றதொரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT