இந்தியா

பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் இந்த ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு

ANI


கான்பூர்: வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களை பெரிய அளவில் குறைக்க அனைத்து இந்திய தொழிற்கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருக்கும் பொறியியல் பாடப்பிரிவுகளில் பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் 1.3 லட்சம் அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏராளமான மாணவர்கள் பொறியியலை தேர்வு செய்வதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஏஐசிடிஇ இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏஐசிடிஇயின் முடிவை வரவேற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகள், ஏராளமான மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருப்பதை இந்த முடிவு தவிர்த்துள்ளது. இதன் மூலம், மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்புள்ள பிற கல்விகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றன.

மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியாததும், இருக்கும் மாணவர் சேர்க்கையில் போதுமான மாணவர்கள் சேராததும் ஏஐசிடிஇ-யின் இந்த முடிவுக்குக் காரணமாகும்.

பல தனியார் கல்லூரிகளில் எம்.டெக். படிப்புக்கான சோதனைக் கூடங்கள் இருப்பதில்லை. சில கல்லூரிகளில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. இதனால், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கல்வியறிவு கிடைக்காமல், அவர்கள் வேலை வாய்ப்புக்கான போட்டியில் பூஜ்யமாக நிற்கிறார்கள். 

தற்போது கிடைத்திருக்கும் புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் உள்ள 83 பொறியியல் கல்வி மையங்கள் தங்களது கல்லூரியில் இருக்கும் 24 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்களை நிரந்தரமாக ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளன. 450 கல்லூரிகள் சில இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகளை இந்த கல்வியாண்டோடு நிறுத்திக் கொள்ளவும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT