இந்தியா

சித்தராமையா அரசின் வீழ்ச்சிக்கு காலம் நெருங்கிவிட்டது: அமித்ஷா

கர்நாடகத்தில் சித்தராமையா அரசின் வீழ்ச்சிக்கு காலம் நெருங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

Raghavendran

224 இடங்களைக் கொண்ட கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 15-ல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாகல்கோட் பகுதியில் அமைந்துள்ள ஹுங்கூட் விதான்சபாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:

கர்நாடகத்தில் சித்தராமையா அரசின் வீழ்ச்சிக்கு காலம் நெருங்கிவிட்டது. கர்நாடகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி அமையும். இதுவரை இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ள 12 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அந்த வகையில் இது தற்போது கர்நாடகத்தின் முறை.

காங்கிரஸ் கட்சி முதல்வர் சித்தராமையாவை மிகவும் நம்பியுள்ளது. ஆனால் அவர் போட்டியிடவுள்ள பதாமி தொகுதியில் நிச்சயம் படுதோல்வியை சந்திப்பார். பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு இம்முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் அவர் கர்நாடக மாநிலத்ததை இந்திய அளவில் முதலிடத்துக்கு உயர்த்துவார். நான் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரியோ ராஜ் - 6 பெயர் போஸ்டர்!

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு! தொடங்கியவுடன் முடங்கிய மக்களவை!

இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும்!

SCROLL FOR NEXT