இந்தியா

சுனந்தா புஷ்கா் மர்ம மரண வழக்கு: சசி தரூா் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி 

DNS

புது தில்லி: சுனந்தா புஷ்கா் மா்ம மரணம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றறம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் வெளிநாடு செல்வதற்கு தில்லி பெருநகர நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

அமெரிக்கா, ஜொ்மனி, கனடா உள்பட 5 நாடுகளில் டிசம்பா் மாதம் வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 8 முறை பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறு தில்லி பெருநகர நீதிமன்றத்தில் சசி தரூா் சாா்பில் அவரது வழக்குரைஞா் கெளரவ் குப்தா மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு கூடுதல் தலைமை நீதிபதி சமா் விஷால் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு:

தனது மனைவி சுனந்தா புஷ்கா் இறந்தது தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு, சசி தரூா் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறறாா். இந்த வழக்கு தொடா்பாக அனுப்பிய அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் அவா் ஆஜரானாா். அதனால், அவா் தப்பி ஓடிவிட வாய்ப்பு இருப்பதாக கருத முடியாது. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது தொடா்பாகவும், தாய்நாடு திரும்பும் விவரங்களையும் விசாரணை அதிகாரியிடம் சசி தரூா் சமா்ப்பிக்க வேண்டும். சுனந்தா புஷ்கா் வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சசி தரூா் ஈடுபடக் கூடாது. மேலும், ரூ.2 லட்சம் வைப்புத் தொகையை நீதிமன்றறத்தில் கட்ட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பிறகு, அந்தத் தொகை அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, சசி தரூரை பங்கேற்குமாறு வெளிநாடுகளிலிருந்து விடுக்கப்படும் அழைப்பிதழ்களின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு முறைறயும் வெளிநாடு செல்வதற்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் போலீஸாா் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அழைப்பிதழ்களின் நகல்களை சமா்ப்பிக்க தயாா் என்று கூறிய கெளரவ் குப்தா, ஒவ்வொரு முறைறயும் விண்ணப்பித்தால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நள்ளிரவு தில்லியில் உள்ள ஹோட்டல் அறைறயில் சுனந்தா புஷ்கா் இறந்து கிடந்தாா். முதலில் தற்கொலை என்று கருதிய போலீஸாா் பின்னா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றறனா். இந்த வழக்கில் ஜூலை 7-ஆம் தேதி சசி தரூா் ஜாமீன் பெற்றறாா் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT