இந்தியா

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும்: சொன்னது யார் தெரியுமா? 

ANI

ஹைதராபாத்: நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி மோடி அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மனத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது மோடி அரசின் மீது கடுமையான குற்றசாட்டுகளை வீசிய ராகுல், தனது பேச்சின் முடிவில் அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை கட்டியணைத்தார். பின்னர் ராகுல் இருக்கைக்குத் திரும்பும் பொழுது மோடி அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினார். பின்னர் தனது இருக்கைக்குச் சென்றவர், காங்கிரஸ் எம்.பியான ஜோதிராதித்ய சிந்தியாவைப் பார்த்து கண்ணடித்த காட்சி இந்தியா முழுக்க வைரலாகப் பரவியது.

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். அதன் நிறுவனத் தலைவரான அசாதுதீன் உவைஸி செய்தியாளர்களிடம் திங்களன்று கூறியதாவது:

மோடி அரசுக்கு எதிராகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ராகுல் தனது பேச்சின் முடிவில் யாருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ அந்த மோடியை சென்று கட்டியணைக்கிறார்.

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராகுல் மோடியை கட்டி அணைத்துள்ளதை பற்றி, காங்கிரசார் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT