இந்தியா

ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது: ரபேல் விவகாரத்தில் மோடிக்கு ராகுல் மீண்டும் சவால்  

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

DIN

புது தில்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அவர் பேசும்போது, "பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான  ஒப்பந்தம் தொடர்பாக   பிரதமர் மோடி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா? அவரால் என்னுடைய கண்களை பார்த்து பேச முடியாது. அவர் எங்கு வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் என்னுடைய கண்களை பார்க்க முடியாது" என்று தெரிவித்தார்..

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

திங்களன்று கர்நாடக மாநிலம் பிதாரில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஏற்கனவே விடுத்த சவாலை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இதுதொடர்பாக  பிரதமர் மோடியுடன் எவ்வளவு நேரமென்றாலும் விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன், அவரால் ஒரு நொடி கூட என்னுடன் விவாதம் செய்ய முடியாது. திருட்டில் ஈடுபடும் ஒருவரால் என்னுடைய கண்களை நேராக பார்க்கவே முடியாது

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சானது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT