இந்தியா

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணமயமான டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்தது கூகுள்! 

DIN

இந்தியா முழுவதும் இன்று 72-வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றது. 

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவை கௌரவிக்கும் வகையில் புகழ்பெற்ற தேடுதல் வலைத்தளமான கூகுள் இணையதளம் இந்திய சின்னங்களை வைத்து வண்ணமயமான டூடுல் ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. 

இந்த டூடுலில் நமது நாட்டின் தேசிய பறவையான மயில் நடுவிலும், தேசிய விலங்கான புலியும், யானையும் இரண்டு பக்கத்தின் ஓரத்திலும், பின்னணியில் சூரிய உதயனும், தேசிய மலரான அழகான தாமரை கீழ்புறத்தில் மலர்வது போன்ற ஓவியமும் அந்த டூடுலில் இடம் பெற்றுள்ளது. 

இந்த ஓவியமானது இந்தியாவில் ஓடும் லாரிகளில் மேல்பகுதியில் அனைவரையும் கவரும் வகையில் வரையப்பட்டுள்ளதைக் காட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இது அனைவரையும் கவர்ந்து வருகின்றது. 

இந்திய சின்னங்களை வண்ணமயமாக ஓவியம் போல் வரைந்து இந்தியாவின் கலைக்கு மரியாதை செல்லும் வகையில் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT