இந்தியா

முப்படைகளில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை தேர்வு செய்ய உரிமை: பிரதமர் மோடி

DIN


சார்ட் சர்வீஸ் கமிஷன் (எஸ்எஸ்சி) மூலம் முப்படைகளிலும் நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர ஆணையத்தை தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து, இதுகுறித்து அவர் பேசுகையில், வீரம் நிறைந்த நமது மகள்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். பாதுகாப்புப் படைகளில், சார்ட் சர்வீஸ் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்டிருக்கும் பெண் அதிகாரிகளுக்கு, வெளிப்படையான செயல்முறையின் மூலம், நிரந்தர ஆணையத்தை தேர்வு செய்வதற்கான உரிமை அளிக்கப்படும். இது அவர்களுக்கான பரிசாகும்' என்றார்.
இந்திய விமானப் படையில் உள்ள போர் விமானங்களில் பெண்கள் பைலட்டுகளாக ஏற்கெனவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், ராணுவம், கடற்படை ஆகியவற்றில் பெண்கள் யுத்தகள பணிகளில் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், ராணுவம், கடற்படை ஆகியவற்றில் யுத்தக் களங்களில் பெண்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது குறித்து பிரதமர் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் பெண்களை நிரந்தரமாக பணியில் சேர்ப்பது தொடர்பான விரிவான கொள்கையை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது' என்றன.
பிரதமருக்கு நிர்மலா சீதாராமன் நன்றி: இதனிடையே, முப்படைகளிலும் பணிபுரியும் பெண் அதிகாரிகள், நிரந்தர ஆணையத்தை தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் மோடிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
சார்ட் சர்வீஸ் கமிஷன் கீழ் நியமிக்கப்படும் அதிகாரிகள், 5 முதல் 14 ஆண்டுகள் வரை மட்டுமே பணியாற்ற முடியும். நிரந்தர ஆணையத்தின் கீழ் வரும் அதிகாரிகள், ஓய்வு பெறும் வயது வரையிலும் பணியாற்றலாம்.
ராணுவத்தில் பெண்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது தொடர்பான வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவில், சார்ட் சர்வீஸ் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணைய பணிக்கு மாற்றும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT