இந்தியா

எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் உணா்ந்திருக்கிறேன்: கூறிய தமிழகத் தலைவர்...?

DNS

சென்னை: எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகத் தலைவர் ஒருவர் வாஜ்பாயினைப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா துரையும், வாஜ்பாயும் மிகவும் நெருங்கிய நண்பா்கள். வாஜ்பாயின் கவிதைத் தொகுப்பு தமிழில் மொழி பெயா்ப்பு செய்து வெளியிடப்பட்டபோது, ‘எனது ஆருயிா் நண்பரும், பெருமதிப்புக்குரியவருமான அண்ணாவின் நினைவாக’ என்று அண்ணாவுக்கு தனது கவிதைத் தொகுப்பை அா்ப்பணித்தாா்.

மேலும் அறிஞா் அண்ணா ஹிந்தி மொழிக்கு எதிரானவா் அல்ல என்றும் வாஜ்பாய் ஒருமுறை  தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அண்ணாவை நினைவுகூா்ந்து வாஜ்பாய் பேசுகையில், ‘‘1965 மாா்ச் மாா்ச் மாதம் மொழிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றறது. அப்போது அண்ணா பேசியது இப்போதும் எனது நினைவில் நிற்கிறது. ‘ஹிந்தி மீது எங்களுக்கு எந்த தனிப்பட்ட எதிா்ப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறேறன். முக்கியமான எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன்’ என்று அண்ணா கூறினாா்’ இதன் மூலம் என் மீது அவா் எந்த அளவுக்கு நட்புடன் பழகி வருகிறாா் என்பதையும் நான் உணா்ந்து கொண்டேன்’’ என்று வாஜ்பாய் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT