இந்தியா

ஸ்மிருதி ஸ்தல் வந்தடைந்தது வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம்; சற்று நேரத்தில் இறுதிச் சடங்கு

DIN


புது தில்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தல் வந்தடைந்தது.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 2 மணியளவில் புறப்பட்டது. பாஜக கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அவரது இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது.

ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாயியின் உடலுக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் மக்கள் வெள்ளம் போல காட்சியளித்தது.

பாஜக தலைமையகத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயியின் உடல் இறுதிச் சடங்கு நடைபெறும் மேடையில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தின் போது வாஜ்பாயியின் உடலுடன் நடந்தே வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயியின் உடல் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதார்.

பூடான் மன்னர் மற்றும் நேபாளம், வங்கதேசம், இலங்கை அமைச்சர்களும், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும் வாஜ்பாயியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

10 முறை மக்களவைக்குத் தேர்வான மக்களின் தலைவராக விளங்கிய வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும்  மேலாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.

வாஜ்பாயியின் மறைவைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களும் இன்று பொது விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT