கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பி-க்கள் ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு அளிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளனர்.

DIN

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளனர். 

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் சனிக்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"வெள்ளத்தால் 180-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்துக்கு மோடி அரசு உதவ முன்வர வேண்டும். கேரள நிவாரணப் பணிகளுக்காக அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி மூலம் அனைத்து காங்கிரஸ் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை அளிக்கவுள்ளனர். கேரளாவுக்கு காங்கிரஸ் ஆளும் அனைத்து அரசுகளும் உதவ வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு ரூ.10 கோடி, கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு ரூ.10 கோடி, புதுச்சேரி அரசு ரூ.1 கோடி என காங்கிரஸ் ஆளும் அரசுகள் ஏற்கனவே வழங்கிவிட்டன. கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் சிறப்பு நிவாரண கமிட்டி அமைக்கப்படவுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சேகரிக்கும் நிவாரண பொருட்கள் கேரள மக்களுக்கு அனுப்பப்படும். வெள்ள நிவாரணத்தில் மோடி பாகுபாடு பார்ப்பதை நிறுத்த வேண்டும். கட்சி வேறுபாடின்றி கேரளாவுக்கு உதவ பிரதமர் முன்வர வேண்டும்" என்றார். 

முன்னதாக, இதேபோன்று ஆம் ஆத்மி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT