முகப்பு
இந்தியா

ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:


திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பம்பா ஆற்றில் வெள்ளப் பெருக்கு இன்னமும் குறையவில்லை என்பதால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, பாம்பா ஆற்றின் அருகே உள்ள சாலைகள் படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதாகவும், கோயில் நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்கு வரும் பாதை முழுக்க தற்போது வெள்ளம் வடிந்தாலும் சேறு நிரம்பி, நடப்பதற்கு இயலாததாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.