இந்தியா

ஆன்லைனில் நீட் தேர்வு என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு

ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

DIN

புது தில்லி: ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அதேசமயம் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதற்கும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது.  

இந்நிலையில் ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தற்பொழுது  வாபஸ் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT