முகப்பு
இந்தியா

காஷ்மீர்: சோஃபியான் மாவட்டத்தில் தீவிரவாதத் தாக்குதலில் 4 போலீஸார் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோஃபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 4 போலீஸார் வீர மரணம் அடைந்தனர். 

Updated On : 29 ஆகஸ்ட், 2018 at 5:46 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:07 PM


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோஃபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 4 போலீஸார் வீர மரணம் அடைந்தனர். 

அவர்களிடம் இருந்து 3 ஆயுதங்களையும் தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சோஃபியானில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த காவல்துறை வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 4 காவலர்கள் காயமடைந்தனர்.

Advertisement

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் அவர்கள் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

அரஹாமாவில் பழுதான காவல்துறை வாகனத்தை சரி செய்யச் சென்ற காவலர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறையினரிடம் இருந்து 3 துப்பாக்கிகளையும் தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த காவலர்கள் மொஹம்மது இக்பால், ஜாவைத் அகமது, அடில் அகமது மற்றும் இஷ்ஃபாக் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.